வேலை தேடிய அனாதை பெண்... முதலாளியின் சந்தேகத்தால் 15 வருடத்திற்குப் பிறகு குடும்பத்தை கண்டுபிடித்த அற்புதம்

Report Print Basu in இந்தியா

2004 ஆம் ஆண்டில் ஹைதராபாத்தில் தொலைந்துபோன 19 வயது பெண், பேஸ்புக் உதவியுடன் 15 வருட காலத்திற்குப் பிறகு தனது குடும்பத்தினரை தொடர்பு கொண்டுள்ளார்.

2004 ஆம் ஆண்டில், நான்கு வயது பவானியும் அவரது சகோதரரும் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தபோது பவானி காணாமல் போனார்.

பவானியை அழைத்துச்சென்ற ஜெயா, வளர்ப்புத் தாயாக மாறியுள்ளார். ஜெயாவிடம் வளர்ந்த பவானி இடைநிலை வரை கல்வி கற்றுள்ளார்.

பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, பவானி விஜயவாடாவில் உள்ள தனது வம்சீதர் பச்சுவின் வீட்டில் வீட்டு உதவியாக வேலை தேடிக்கொண்டிருந்தார்.

பவானியின் ஆதார் மற்றும் பிற ஆவணங்களை அடையாளச் சான்றாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் சமர்ப்பிக்குமாறு வம்சீதர் கோரியுள்ளார்.

இருப்பினும், அந்த ஆவணங்களை பொறாத பவானி, தான் வளர்ப்புத் தாயால் வளர்க்கப்பட்ட அனாதை என்று விளக்கியுள்ளார்.

வேலையைப் பெறுவதற்காக பவானி கதையை உருவாக்குகிறார் என்று சந்தேகித்த முதலாளி வம்சீதர், சமூக ஊடகங்களில் அவர் கூறிய கூற்றின் உண்மைத்தன்மையை சரிபார்க்க முடிவு செய்துள்ளார்.

10 ஆண்டுகளுக்கு மேலாக தனது குடும்பத்திலிருந்து பிரிந்திருந்தாலும், பவானி தனது சகோதரரின் பெயர், சந்தோஷ், அவர்களது குடும்பப் பெயர் மற்றும் அவர் வாழ்ந்த சிபுரிபள்ளியில் உள்ள தனது கிராமத்தின் பெயரை நினைவுபடுத்தி கூறியுள்ளார்.

newsminute

பின்னர் வம்சீதர் பவானியின் குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை பேஸ்புக்கில் தேடியுள்ளார். பேஸ்புக்கில் அவரது சகோதரரின் பெயரான கோடிபெட்லா சந்தோஷில் கணக்கை தேடியுள்ளார், சுமார் 20 கணக்குள் இதே போன்ற பெயர்களுடன் இருந்துள்ளது.

அவர்களது குடும்பத்தில் யாராவது 15 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போயிருக்கிறார்களா என்று விசாரித்து அனைவருக்கும் மெசேஜ் அனுப்பியுள்ளார் வம்சீர்.

30 நிமிடங்களில், சந்தோஷ் என்ற கணக்கு ஒன்றிலிருந்து அவருக்கு பதில் வந்துள்ளது, அதில், ஏழு வயதில் தனது சகோதரி உண்மையில் காணாமல் போனதாக தெரிவித்துள்ளார். வம்சீரின் மெசேஜிக்கு பதிலளித்த சந்தோஷ், பவானியின் மூத்த சகோதரர் என உறுதியாகியுள்ளது.

பேஸ்புக்கில் தனது சகோதரர்களைக் கண்டுபிடிப்பதைப் பற்றி வம்சீதர் தெரிவித்தபோது, ​​மகிழ்ச்சியடைந்த பவானி, உடனடியாக அவரது குடும்பத்தினரான, சந்தோஷ், கோபி, அவரது தாய் வரலட்சுமி மற்றும் தந்தை மாதவ ராவ் உடன் வீடியோ அழைப்பு மூலம் பேசியுள்ளார்.

விரைவில் அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல குடும்பத்தினர் விஜயவாடாவை அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்