உள்ளாட்சி தேர்தலில் நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவு குறித்து வெளியானது முக்கிய தகவல்

Report Print Basu in இந்தியா

தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவு குறித்து ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது.

புதிதாக அறிவிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர 27 மாவட்டங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. முதல் கட்ட வாக்குபதிவு டிசம்பர் 27ம் திகதி, இரண்டாவது கட்ட வாக்குபதிவு டிசம்பர் 30ம் திகதி நடைபெறவுள்ளது.

வாக்கு எண்ணிக்கை 2020 ஜனவரி 2ம் திகதி நடைபெறும் என தமிழக தேர்தல் ஆணையம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் நடப்பது உறுதியாகியுள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவு குறித்து ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Image

அதில், தமிழகத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் ரஜினிகாந்த் அவர்கள் யாருக்கும் ஆதரவு கொடுக்கவில்லை.

ஆகையால் யாரும் ரஜினி மக்கள் மன்றத்தின் பெயரிலோ, ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரிலோ, மன்றத்தின் கொடியோ, ரஜினியின் பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தி வாக்கு சேகரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்