நடிகர் ரஜினியின் முன் தன்னை எச்சரித்த பிரபல தமிழ் நடிகர்... சீமான் கேட்ட நறுக் கேள்வி

Report Print Santhan in இந்தியா

பிரபல திரைப்பட நடிகரான ரஜினியின் தர்பார் பட ஆடியோ வெளியிட்டு விழாவின் போது, நடிகர் ராகவா லாரன்ஸ் சீமானை மறைமுகமாக சாடியிருந்த நிலையில், அதற்கு சீமான் அவர் எந்த நாட்டிற்காக பேசுகிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் இருக்கும் நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடிகரும், தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாருமான ரஜினியின் தர்பார் பட ஆடியோ வெளியிட்டு விழா நடந்தது.

இதில் திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். அதில் நடிகர் ராகவாலாரன்சும் ஒருவர். இவர் மேடையில் நான் ரஜினி ரசிகராக இருந்த போது, கமலின் போஸ்டரில் சாணி அடித்தேன், ஆனால் இப்போது அதை நினைக்கும் போது கொஞ்சம் கவலையாக இருக்கிறது.

அதுமட்டுமின்றி இப்போது இவர்கள் இருவரும் சேரப் போகிறார்கள் என்று நினைக்கும் போது ஏதோ ஒரு மாற்றம் நிகழப்போகிறது என்பது மட்டும் தெரிகிறது என்று கூறினார்.

அதோடு எனக்கு அரசியல் தெரியாது. ஆனால் என்னை சீண்டி அரசியல் கற்று கொள்ள வைத்துவிடாதீர்கள், ரஜினியை யார் தவறாக பேசினாலும் நான் அதற்கு பதில் சொல்வேன் என்றார்.

நான் இந்த மேடையில் இப்படி பேசுவதற்கு ரஜினி சார் என்னிடம் பேசாமல் போனாகூட பரவாயில்லை. ஆனால் சீமான் பேச்சு நாட்டுக்கு நல்லதல்ல என்று மறைமுகமாக கூறினார்.

இது குறித்து சென்னை விமான நிலையத்தில் சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு சீமான் நான் என் நாட்டுக்காக பேசுகிறேன். தம்பி ராகவா லாரன்ஸ் எந்த நாட்டுக்காக பேசுகிறார் என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் ராகவாலாரன்ஸ் கமலின் போஸ்டரில் சாணி அடித்ததுண்டு என்று கூறியது கமல் ரசிகர்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இன்று ராகவாலாரான்ஸ் நான் ஒரு விஷயத்தை கூறினால், அதை வேறுவிதமாக நினைத்து கொள்கிறார்கள், நான் அப்படி எதுவும் தவறாக பேசியிருந்தால் மன்னிப்பு கேட்கவும் தயார் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்