அய்யோ மாமா என்று கத்தினேன்! அலறி துடித்தார்... வெளிநாட்டில் மனைவி கண்முன்னே பரிதாபமாக இறந்த கணவர்

Report Print Santhan in இந்தியா

சூடான் நாட்டில் தொழிற்சாலை விபத்தில் தமிழகத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர் உயிரிழந்த நிலையில், அவரின் மனைவி வரவிருக்கும் பொங்கலுக்கு வருகிறேன், கொலுசு வாங்கி தருகிறேன், வெளியில் எங்காவது சென்று வருவோம் என்று கூறியதாக வேதனையுடன் பேசியுள்ளார்.

சூடான் தலைநகர் கார்டூமின் புறநகர் பகுதியில் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 23 தொழிலாளர்கள் உடல் கருகி பலியாகினர்.

உயிரிழந்த 23 பேரில் 18 பேர் இந்தியர்கள் எனவும் இதில் தமிழகத்தின் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மானடி குப்பத்தை சேர்ந்த 35 வயதான ராஜசேகர் என்பவர் பரிதாபமாக பலியானார். இந்த விபத்து நடைபெறும் போது அவருடைய மனைவியிடம் ராஜசேகர் வீடியோ அழைப்பில் பேசியதாக செய்தி வெளியாகியிருந்தது.

BBC/TAMIL

இந்நிலையில் பிரபல தமிழ் ஊடகமான பிபிசி ராஜசேகரின் மனைவியான கலைசுந்தரியிடம் ராஜசேகர் பற்றி கேட்ட போது, எங்களுக்கு திருமணமாகி சிவானி என்ற பெண் குழந்தை உள்ளது.

டிப்ளோமா படித்த ராஜசேகர் தன்னுடைய குடும்ப சூழல் மற்றும் எதிர்காலத்திற்காக வெளிநாட்டிற்கு வேலை செல்வதற்கு முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சூடான் நாட்டில் செயல்பட்டு வரும், செராமிக்ஸ் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றார்.

BBC/TAMIL

வேலைக்கு சேர்ந்த 14 மாதங்களுக்கு பிறகு, கடந்த ஜனவரி மாதம் 2 மாதம் விடுப்பில் ஊருக்கு வந்தார். அதன் பின் சூடானுக்கு சென்ற அவர், தினமும் எங்களிடம் போனில் பேசுவார்.

அப்படி கடந்த செவ்வாய் கிழமை அவர் போனில் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த போது, அந்த சம்பவம் நடந்தது. எப்போது வேலைக்கு சென்று கையெழுத்து போட்டவுடன் என்னிடம் போனில் பேசுவார், என்னை சாப்பிட்டியா, குழந்தையை பற்றி பேசுவார்.

BBC/TAMIL

அதன் பின் இரவு வந்து போன் செய்வார், செவ்வாய் கிழமை தான் அவருக்கு வார விடுமுறை, அன்றைய தினம் எப்போதும் வேலை எல்லாம் சீக்கிரம் முடித்துவிட்டு, போன் பேசுவார், அன்றைய தினம் காலையிலே போன் செய்துவிட்டார். எப்போதும் வேலை எல்லாம் முடித்துவிட்டு தானே பேசுவார்.

இப்போது என்ன இவ்வளவு சீக்கிரம் என்று நான் போன் பேசிய போது, நான் இன்னும் ஒரு மாதத்தில் அதாவது பொங்கலுக்கு வீட்டிற்கு வந்துவிடுவேன், நீ கேட்ட பெரிய கொலுசு வாங்கி தருகிறேன், என் தங்க பிள்ளை சிவானிக்கு கொலுசு மாற்றி தருகிறேன்.

BBC/TAMIL

உனக்கு புடவை எடுத்து தருகிறேன் என்று பேசிக் கொண்டிருந்த போது, அவர் திடீரென்று அலறினார், அதிர்ச்சியில் உறைந்த நான் செல்போனையே பார்த்து கொண்டிருந்தேன், அதன் பின் என்ன மாமா.. என்ன மாமா ஆச்சு என்று கதறினேன், துடித்தேன், அவர் பேசிய இடத்தில் வெறும் தீ மட்டுமே தெரிந்தது.

வீடியோவும் கட் ஆகிவிட்டது, நான் அதை எப்படி மறக்க போகிறேன் என்று கதறி அழுதார். அதன் பின் அவரின் உறவினரிடம் கலைசுந்தரி நடந்த சம்பவத்தை கூற, உடனே அவர் இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு, இதைப் பற்றி கூற, அதன் பின் ராஜசேகர் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்துள்ளது.

ராஜசேகரை இறந்த துக்கத்தில் அவரின் குடும்பத்தினர் மிகுந்த வேதனையில் உள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்