டெல்லி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து... தூங்கிக்கொண்டிருந்த 43 தொழிலாளர்கள் பலி

Report Print Basu in இந்தியா

இந்தியா தலைநகர் டெல்லியில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 35 பேர் பலியாகியுள்ளனர்.

ராணி ஜான்சி சாலையில் உள்ள அனாஜ் மண்டியில் உள்ள அட்டை தொழிற்சாலையிலே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அதிகாலை 5.22 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது, இதைத் தொடர்ந்து சம்பவயிடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்துள்ளனர்.

விபத்து குறித்து டெல்லி தீயணைப்புத்துறை தலைவர் அதுல் கார்க் கூறுகையில், ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சாலை தொழிலாளர்கள் என 60 முதல் 70 பேர் வரை தூங்கிக்கொண்டிருந்த ஐந்தடுக்கு கட்டிடத்தில் காலை 5 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ மோசமாக இருந்தது, சுமார் 50 தீயணைப்பு வாகனங்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது வரை 56 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். புகை காரணமாக அனைவரும் மயங்கி நிலையில் மீட்கப்பட்டனர்.

மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கட்டிடத்தில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பதை கண்டறிய நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். தீ விபத்துக்கான காரணத்தை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. கட்டிடத்தில் தீயணைப்பு உபகரணங்கள் இருந்தனவா என்பது விசாரணைக்குரிய விஷயம் என்று அவர் கூறினார்.

மருத்துவமனயைில் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு பிரதமர் மோடி, டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் வயநாடு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி உட்பட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்