அப்பாவி பிள்ளைய கற்பழிச்சுருக்கானுங்க... கைகட்டி வேடிக்கை பார்க்கணுமா? தமிழக அமைச்சர் ஆவேசம்

Report Print Abisha in இந்தியா

தெலுங்கான என்கவுண்டர் தொடர்பாக தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலஜி கொந்தளிப்புடன் பேசியுள்ளார்.

தெலுங்கான மருத்துவர் பிரிங்காரெட்டி கொலை தொடர்பாக இந்திய முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், குற்றவாளிகள் நால்வரும் என்கவுண்டர் செய்யப்பட்டனர்.

இந்த விவகாரம் குறித்து, நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ”இவனுங்கள எல்லாம் சட்டத்திற்கு முன் நிப்பாட்டி எப்போது தீர்பு வழங்குவது? ஓடிப்போனான்... தப்பிச்சு ஓடிபோனவனை பார்த்துகிட்டு சும்மா இருக்கணுமா? சுடவேண்டியதுதானே... அவனை தேடி பிடித்து விசாரணை நடத்தி, ஜாமின் வழங்கி... நீதிமன்றத்திற்கு வரவழைத்து... இது எல்லாம் தேவையா?

தப்பு செய்தது உறுதியாயிடுச்சுல்ல. நெத்தியில் வைச்சு சுட்டு பின்னாடி மூளையை சிதச்சிடணும். அப்பாவி பிள்ளைய கற்பழிச்சுருக்கான் அவன கை கட்டி வேடிக்கை பார்க்கணுமா” என்று பேசியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்