அந்த கொடூரன்களை தூக்கிலிட நான் தயார்! ஊதியம் கூட தர வேண்டாம்... வீறு கொண்ட சிங்கமாய் எழுந்த தமிழர்

Report Print Raju Raju in இந்தியா

நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட தான் தயாராக இருப்பதாக சிறை அதிகாரிகளுக்கு தமிழகத்தை சேர்ந்த தலைமைக் காவலர் ஒருவர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு நிர்பயா என்ற மருத்துவ மாணவி பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது 6 நபர்கள் கூட்டாக சேர்ந்து ஓடும் பேருந்திலேயே அவரை பலாத்காரம் செய்து கொடூரமாக கொன்றனர்.

நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா தாகூர் மற்றும் 16 வயதுடைய ஒரு சிறுவனும் கைது செய்யப்பட்டனர்.

16 வயது என்பதால் அவனுக்கு அதிகபட்சமாக 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ராம் சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். மற்ற நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை விதித்தது நீதிமன்றம்.

இதற்கிடையில் திகார் சிறையில் தூக்கு தண்டனையை நிறைவேற்ற ஆள் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளதால், அந்த பணியை செய்யத் தயார் என தமிழகத்தின் ராமநாதபுரத்தை சேர்ந்த தலைமைக் காவலர் சுபாஷ் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

அதன்படி அவர் எழுதிய கடிதத்தில், நிர்பயா வழக்கில் தண்டனை பெற்ற 4 பேரை தூக்கிலிட திகார் சிறையில் ஆளில்லை என்ற தகவல் வெளியானது. ஆனால் அவர்களுடைய தண்டனையை நிறைவேற்ற நான் தயாராக இருக்கிறேன், எனக்கு ஊதியம் தர வேண்டாம் என எழுதியுள்ளார்

இவர், பிணங்களை அடக்கம் செய்வது, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வது என தன்னுடைய சேவையை தொடர்ந்து செய்து வந்துள்ளார்.

மேலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் அண்ணா பதக்கம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்