பிரியங்கா வழக்கு என்கவுண்டர்! பிரேத பரிசோதனை அறிக்கை முடிவுகள்.. முக்கிய குற்றவாளி தொடர்பில் அதிர்ச்சி தகவல்

Report Print Raju Raju in இந்தியா

பிரியங்கா ரெட்டி வழக்கில் கைதான நால்வரும் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்ட நிலையில் அவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி (26) பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டார்.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பில் முகமது பாஷா, நவீன், ஷிவா, சின்னகேஷவலு ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டனர்.

நால்வரையும் நேற்று முன்தினம் பொலிசார் சம்பவ இடத்துக்கு அழைத்து சென்ற போது அவர்கள் பொலிசாரின் துப்பாக்கியை பறித்து அவர்களை நோக்கி தாக்குதல் நடத்த தொடங்கினர்.

இதை தொடர்ந்து நால்வரையும் பொலிசார் என்கவுண்டரில் சுட்டு கொன்றார்கள்.

இதையடுத்து நால்வரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில் இந்த பிரேத பரிசோதனை முடிவுகள் தொடர்பிலான அறிக்கையை டைம்ஸ் நவ் தொலைக்காட்சி பிரத்தியேகமாக வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்த வழக்கின் முதன்மை குற்றவாளியான முகமது உடலை 4 துப்பாக்கி குண்டுகள் துளைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை குறித்த மருத்துவமனை வட்டாரம் மூலம் தெரிந்ததாக டைம்ஸ் நவ் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், பிரேத பரிசோதனை தொடர்பான முழு அறிக்கை விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே தேசிய மனித உரிமைகள் ஆணையம் இந்த என்கவுண்டர் தொடர்பாக சம்மந்தப்பட்ட பொலிசாருக்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணையை துரிதப்படுத்தியுள்ளது.

இந்த சூழலில் முக்கிய குற்றவாளியை ஒரு முறை மட்டும் சுடாமல் நான்கு முறை சுட்டது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்