தன்னை பலாத்காரம் செய்தவர்களை சாட்சி சொல்ல வந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி! கதறி துடித்த பரிதாபம்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் கால்நடை மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நான்கு பேர் என் கவுண்டர் செய்யப்பட்ட சம்பவத்தை நாட்டு மக்கள் பாராட்டி வரும் நிலையில், சாட்சி சொல்ல வந்த இளம் பெண் எரிந்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் சிவம் திரிவேதி, சுபம் திரிவேதி என்ற 2 பேர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இளம்பெண்ணை கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக கடந்த மார்ச் மாதம் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் சிவம் திரிவேதி மட்டும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரும் கடந்த நவம்பர் மாதம் 30-ஆம் திகதி ஜாமீனில் வெளியில் வந்தார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை ரேபரேலி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு பாதிக்கப்பட்ட இளம் பெண் சென்ற போது, சிவம் திரிபாதி சுபம் திரிபாதி உள்ளிட்ட 5 பேர் நடுவழியில் அப்பெண்ணை வழிமறித்து, எரித்துக்கொலை செய்யும் நோக்கில் அப்பெண்ணை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தனர்.

இதனால் அப்பெண் அலறிய படி தன்னை காப்பாற்றும் படி சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு ஓடியுள்ளார். இதைக் கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்சிற்கு போன் செய்து வரவைத்துள்ளனர்.

தீயில் எரிந்த அந்த பெண், தன்னை பாலியல் வன்கொடுமை செய்த 5 பேர் தான் எரித்ததாக வாக்குமூலம் கொடுக்க, உடனடியாக அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த பெண் யார்? பெயர் என்ன என்பது குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்