இது தாண்டா பொலிஸ்.. சரியான என் கவுண்டர்: பொள்ளாச்சி வழக்கு குறித்து கேட்ட தமிழ் பிரபலம்

Report Print Santhan in இந்தியா
814Shares

தெலுங்கானாவில் பாலியல் பலாத்கார கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் கொலை செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் பொள்ளாச்சி வழக்கு குற்றவாளிகளின் நிலை என்ன என்பது குறித்து பிரபல ஆடை வடிவமைப்பாளர் வாசுகி பாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நான்கு பேர் பொலிசாரால் என் கவுண்டர் செய்யப்பட்டனர்.

இதற்கு திரைப்பிரபலங்கள் பலரும் ஹைதராபாத் பொலிசாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த வாழ்த்துகளுடன், தமிழ் நாட்டை சேர்ந்த இணையவாசிகள், பொள்ளாச்சி வழக்கு குற்றவாளிகள் தொடர்பாகவும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல ஆடை வடிவமைப்பாளரான வாசுகி பாஸ்கர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இது தான்டா பொலிஸ். சட்டம் என்பது மக்களுக்காக மக்களால் உருவாக்கப்பட்டது. இது மாதிரியான என்கவுன்ட்டர் தேவைதான். என்கவுன்ட்டர் பற்றிய செய்திகள் வந்துகொண்டிருக்கும் வேளையில் தமிழகத்தில் இருப்பவர்கள் யாருக்காவது பொள்ளாச்சி வழக்கின் குற்றவாளிகளின் நிலை என்னவென்று தெரியுமா? என கேட்டுள்ளார்.

வாசுகி பாஸ்கர், தமிழில் வெளியான தமிழ்ப் படம், மங்காத்தா, சமர், என்றென்றும் புன்னகை, ஆம்பள உள்ளிட்ட பல படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராகப் பணிபுரிந்தவர், இவர் இசையமைப்பாளர் இளையராஜாவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்