பிரியங்கா கொலை விவகாரம்... மகனை அனுப்பி அழுத்தம் கொடுத்த முதல்வர்! என் கவுண்டரின் முழு பின்னணி

Report Print Santhan in இந்தியா
1530Shares

இந்தியாவில் கால்நடை பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் என்கவுண்டர் செய்யப்பட்டதன் பின்னணியில் முதல்வர் தன் மகனை அழைத்து பொலிசாருக்கு கொடுத்த அழுத்தமும் ஒரு காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஹைதராபாத்தில் கடந்த மாதம் 27-ஆம் திகதி கால்நடை பெண் மருத்துவர் பிரியங்கா என்பவர் நான்கு பேர் கொண்ட கும்பலால் வன்புணர்வு செய்யப்பட்டு மிக மோசமாக கொடுமைப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் அனைவரும் இன்று பொலிசாரால் என் கவுண்டர் செய்யப்பட்டனர். தெலுங்கானா அரசின் மீது கடும் கோபத்தில் இருந்த மக்கள், இந்த என் கவுண்டர் மூலம் அம்மாநில அரசு மற்றும் பொலிசாரை தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.

சந்திரசேகர ராவ்

இதன் பின்னணியில் முதல்வர் இருப்பதாகவும், அவர் தன் மகனை அனுப்பி பொலிசாருக்கு அழுத்தம் கொடுத்ததே முக்கிய காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் நடந்ததை அறிந்தவுடன் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தீவிர விசாரணை மேற்கொள்வோம் என்று உத்தரவிட்டிருந்தார். இப்படி கூறிவிட்டு, அவர் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவதாகவும், இந்த சம்பவத்தை அவர் கண்டுகொள்ளவே இல்லை என்று கூறப்பட்டது.

ஆனால் சந்திரசேகர ராவ் இந்த சம்பவம் குறித்த வழக்கை விசாரிக்க, 10 தனிப்படை அமைத்தார். முக்கிய சைபராபாத் கமிஷ்னர் சஜ்னாரிடம் இது தொடர்பாக தொடர்ந்து ஆலோசனை செய்துள்ளார்.

அதுமட்டுமின்றி டிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவரும் தனது மகனுமான கே டி ராமா ராவையும் சந்திரசேகர ராவ் பொலிசாருடன் அனுப்பி வைத்துள்ளார். பொலிசாருடன் இருந்து கே டி ராமா ராவ் இந்த வழக்கை மிக தீவிரமாக கவனித்து வந்துள்ளார். நேரடியாக அவர் இந்த வழக்கு மீது கவனம் செலுத்தியுள்ளார்.

நான்கு பேரை கைது செய்த பின்னரும் கூட, கே டி ராமா ராவ் பொலிசாரிடம் இருந்து விலகி வரவில்லை. தொடர்ந்து கவனித்து வந்து பொலிசாருக்கு அழுத்தம் கொடுத்தபடியே இருந்துள்ளார்.

அதை வெளிப்படுத்தும் விதமாக, தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், அவர் எல்லா குற்றவாளிகளையும் பிடித்துவிட்டோம். ஆனால் இன்னும் அந்த பெண்ணின் குடும்பத்திற்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை. தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம், என்று மிகவும் கோபமாக குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் கட்சி பணிகளை கவனிக்க வேண்டும் என்று கே டி ராமா ராவ் நேற்று முதல் நாள் ஹைதராபாத் சென்ற போது, அங்கு அவரை சந்தித்த மக்கள் மற்றும் மாணவர்கள் இந்த வன்புணர்வு வழக்கு குறித்து கேட்டுள்ளார். மக்கள் அனைவரும் இந்த சம்பவத்தால் கடும் கோபத்தில் இருப்பதை உணர்ந்துள்ளார்.

இதனால் உடனடியாக இது குறித்து நேற்று முதல்வர் சந்திரசேகர ராவ் உடன் பேசினார். மக்கள் எல்லோரும் கோபமாக இருக்கிறார்கள். இதில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அறிவுறித்திய பின்னரே இந்த என் கவுண்டர் நடந்துள்ளது. இந்த என் கவுண்டருக்கு முக்கிய காரணம் மக்கள் கொடுத்த அழுத்தம் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்