திருமணத்தில் நடனமாடுவதை நிறுத்திய பெண்ணை முகத்தில் சுட்ட மர்ம நபர்கள்: திகிலூட்டும் காட்சி

Report Print Basu in இந்தியா
176Shares

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் திருமணத்தில் நடனமாடுவதை நிறுத்திய பெண்ணை, மர்ம நபர்கள் முகத்தில் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சித்ரகூட் மாவட்டத்தில் உள்ள டிக்ரா கிராமத்திலே இக்கோர சம்பவம் அரங்கேறியுள்ளது.

டிக்ரா கிராம தலைவர் மகளின் திருண நிகழ்ச்சி டிசம்பர் 1ம் திகதி இரவு நடைபெற்றுள்ளது. திருண விழாவில் பெண்கள் நடனமாடும் சிறப்பு நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது.

வெளியான வீடியோவில், பெண்கள் குழுவாக மேடையில் நடனமாடிக்கொண்டிருந்த போது திடீரென பாட்டு இசைப்பது நிறுத்தப்பட்டதால் நடனமாடுவதை நிறுத்துகின்றனர்.

பெண் நடனமாடுவதை நிறுத்திய பிறகு குடிபோதையில் இருந்த நபர், ‘துப்பாக்கியால் சுடப்படும்’ என்று கூறுவது வீடியோவில் கேட்கிறது.

மற்றொரு நபர் ‘சகோதரதே நீங்கள் துப்பாக்கியால் சுட வேண்டும்’ என்று சொல்வதும் கேட்கிறது.

அந்தப் பெண் திடீரென பின்னால் இருந்து சுடப்படுகிறார், இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. புல்லட் அவள் முகத்தில் பாய்ந்தது.

twitter

கிராமத் தலைவரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் அந்தப் பெண்ணை சுட்டுதாகக் கூறப்படுகிறது. அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நாங்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய முயற்சிக்கிறோம், குற்றவாளியை நீதிக்கு கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்" என்று மூத்த பொலிஸ் அதிகாரி கூறியுள்ளார்.

கான்பூரில் உள்ள மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட பெண் குணமடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்