மரணம் தான் தீர்வு! பிரியங்கா வழக்கில் கைதான கொடூரர்கள் சுட்டு கொல்லப்பட்டது குறித்து சீமான் கருத்து

Report Print Raju Raju in இந்தியா
375Shares

பிரியங்கா வழக்கில் என் கவுண்ட்டரில் நால்வர் சுட்டு கொல்லப்பட்ட நிலையில் தமிழக அரசியல் பிரபலங்கள் அது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளனர்.

தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் பிரியங்கா ரெட்டி என்ற கால்நடை பெண் மருத்துவர் கடந்த 27-ஆம் திகதி கூட்டு பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார்.

இது தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இன்று அதிகாலை சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு 4 பேரையும் அழைத்துச் சென்று, எப்படி கொலை செய்தனர் என பொலிசார் செய்து காட்டச் சொல்லியுள்ளனர்.

அப்போது 4 பேரும் தப்பித்து ஓட முயன்றதால் 4 பேரையும் காவல்துறையினர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்த தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்த், என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றதை நல்ல செயலாக பார்க்கிறேன். இதேபோன்று கடினமான தண்டனையை குற்றவாளிகளுக்கு தரவேண்டும் என கூறினார்.

திமுக எம்.பி கனிமொழி கூறும்போது, எல்லோருக்கும் நியாயமான முடிவு என்றே தோன்றும். இதை மறுப்பதற்கில்லை. அதேசமயம் நாட்டில் சட்டம் என்றெல்லாம் இருக்கிறது. நீதிமன்றம் மூலம் விரைவாக விசாரிக்கப்பட்டு தண்‌டனை கிடைத்திருந்தால் சரியானது. என்கவுன்ட்டர் தான் இதற்கு தீர்வா எனவும் கேள்வி எழுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் வானதி சீனிவாசன் கூறுகையில், இந்த விவகாரத்தில் நீதித்துறை மூலம் அரசு நடவடிக்கை எடுத்திருக்கலாம் என கூறினார்.

இந்த என் கவுண்ட்டரை வரவேற்றுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், பெண்களை போதை பொருளாக கருதி வன்புணர்வு செய்பவர்களுக்கு மரணம் ஒன்று தான் தீர்வு என தெரிவித்துள்ளார்

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்