பிரியங்காவை கொலை செய்த குற்றவாளிகள் என் கவுண்டர்... மிகவும் மகிழ்ச்சி என நிர்பயாவின் தாய் உருக்கம்

Report Print Santhan in இந்தியா
970Shares

இந்தியாவில் பிரியங்கா ரெட்டி என்ற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த நான்கு பேரை பொலிசார் என்கவுண்டரில் சுட்டுத் தள்ளியது தனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாக நிர்பயாவின் தாய் கூறியுள்ளார்.

ஹைதரபாத்தை சேர்ந்த பிரியங்கா ரெட்டி என்ற கால்நடை பெண் மருத்துவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு நான்கு பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு, எரிந்த நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியதால், குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும் என்று தெலுங்கானா உள்ளிட்ட பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

இதையடுத்து இன்று அதிகாலை இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நான்கு பேர் தப்பி ஓட முயன்றதாக கூறி சுட்டு தள்ளினர். இதனால் பொலிசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

கடந்த 2012-ஆம் ஆண்டு இதே போன்ற நிர்பயா என்ற மருத்துவ மாணவி, ஒரு கும்பலால் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

அதன் பின் சிகிச்சைக்காக சிங்கப்பூரில் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிர்பயா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வழக்கில், வினய் குமார், முகேஷ், பவன், அக் ஷய் ஆகிய நான்கு பேருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் நிர்பயாவின் தாயாரான ஆஷா தேவி, பிரியங்கா சம்பவத்தில் நான்கு குற்றவாளிகளையும், பொலிசார் என்கவுண்டர் செய்துவிட்டனர் என்ற தகவல் அறிந்தவுடன் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன், பொலிசார் தங்கள் கடமையை சிறப்பாக செய்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்