பிரியங்காவின் ஆன்மா இப்போது அமைதி அடைந்திருக்கும்! அவரின் தந்தை உருக்கமான பேட்டி

Report Print Raju Raju in இந்தியா

பிரியங்கா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வர் சுட்டு கொல்லப்பட்ட நிலையில் பொலிசாருக்கு அவரின் தந்தை நன்றி தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தை சேர்ந்த பிரியங்கா ரெட்டி (26) கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான முகமது பாஷா, நவீன், ஷிவா, சின்ன கேசவலு ஆகிய நால்வரும் இன்று அதிகாலை 3 மணியளவில் என்கவுண்ட்டரில் சுட்டு கொல்லப்பட்டனர்.

இது குறித்து பிரியங்கா ரெட்டியின் தந்தை அளித்துள்ள பேட்டியில், என் மகள் உயிரிழந்து பத்து நாட்கள் ஆகிறது.

என்கவுண்ட்டர் சம்பவத்துக்காக பொலிசாருக்கும், அரசாங்கத்துக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

தற்போது என் மகளின் ஆன்மா நிச்சயம் அமைதி அடைந்திருக்கும் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்