பிரியங்கா கொலை வழக்கு: நான்கு கொடூரர்கள் சுட்டுக்கொலை... பெண்களின் நெகிழ்ச்சி வீடியோ!

Report Print Abisha in இந்தியா
238Shares

ஹைதரபாத்தில், பிரியங்கா ரெட்டி என்னும் பெண் மருத்துவர் கொடூர கொலை செய்த சம்பவத்தில், குற்றவாளிகளுக்கு பொலிசார் கொடுத்த தண்டனை குறித்து பெண்கள் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளனர்.

ஹைதரபாத்தில் பிரியங்கா ரெட்டி என்னும் 26 வயது கால்நடை மருத்துவர் 10 நாட்களுக்குமுன் 4 கொடூரர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டார்.

இச்சம்பவம், இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று அந்த நான்கு குற்றவாளிகளான முகமது பாஷா, நவீன், ஷிவா, சின்ன கேசவலு பிரியங்கா கொலைசெய்யப்பட்ட இடத்தில் வைத்தே சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

பலரும் பொலிசாருக்கு பாராட்டுகள் தெரிவித்து வரும் நிலையில், அந்த பகுதியை கடந்து சென்ற பேருந்தில் இருந்த பெண்கள் பொலிசாரை பார்த்து வாழ்த்துகள் பகிர்ந்ததுடன், தங்களின் மகிழ்ச்சியை வெளிபடுத்தி சென்றனர்.

முன்னதாக பொலிசாரை கண்டு பலரும் பயந்தும், ஏழனமாக பார்க்கும் சூழல் இருக்கும் நிலையில், இந்த நடவடிக்கை பெண்கள் மத்தியில் பொலிசாரின் மதிப்பை உயர்த்தியுள்ளது என்பதை காட்டுகின்றது என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்