பிரியங்காவை பலாத்காரம் செய்து கொன்ற சிறுவர்கள் உள்ளிட்ட நான்கு கொடூரர்கள் சுட்டு கொலை! பரபரப்பு தகவல்

Report Print Raju Raju in இந்தியா
1788Shares

ஹைதராபாத்தில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து, எரித்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட 4 பேரும் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி என்ற இளம் பெண் சில தினங்களுக்கு முன் லொறி டிரைவர் மற்றும் கிளீனர் என நான்கு பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமான முறையில் எரித்து கொல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தில் முகமது பாஷா, நவீன், ஷிவா, சின்ன கேசவலு ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டனர்.

இதில் இரண்டு பேர் 18 வயது பூர்த்தியடையாத சிறுவர்கள் என தெரிகிறது.

கைது செய்யப்பட்ட நால்வரும் செர்லப்பள்ளி சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு 4 பேரையும் அழைத்துச் சென்று, எப்படி கொலை செய்தனர் என பொலிசார் செய்து காட்டச் சொல்லியுள்ளனர்.

அப்போது 4 பேரும் தப்பித்து ஓட முயன்றதால் 4 பேரையும் காவல்துறையினர் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது. மருத்துவரை எரித்துக்கொன்ற இடத்திலேயே இந்த என்கவுன்ட்டர் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த எண்கவுண்டரின் போது மூன்று காவலர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுட்டு கொல்லப்பட்ட பின்னர் நான்கு பேரின் சடலங்களும் ஷத்நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

என் கவுண்டரில் சுட்டு கொன்றது எப்படி?

இன்று அதிகாலை ஹைதராபாத் - பெங்களூரு நெடுஞ்சாலையான 44 நெடுஞ்சாலை அருகே 4 பேரையும் பொலிசார் அழைத்துச் சென்றுள்ளனர்.

அவர்களிடம் பெண் மருத்துவரை எப்படி கொலை செய்தனர் ? என பொலிசார் செய்து காட்டச்சொல்லியுள்ளனர்.

அவ்வாறு செய்து காட்டும்போது, அவர்கள் நான்கு பேரும் தப்பி ஓடியதாக தெரிகிறது. அப்போது அவர்களை தடுக்க முயன்ற பொலிசாரையும் தாக்கிவிட்டு 4 பேரும் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பொலிசார் தற்காப்புக்காக 4 பேரையும் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்