ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 5வயது சிறுவன்: மீட்பு பணிகள் தீவிரம்

Report Print Abisha in இந்தியா

ராஜஸ்தான் மாநிலத்தில், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 5வயது சிறுவனை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சிரோகி பகுதியின் சிபோகான் கிராமத்தைச் சேர்ந்த 5வயது சிறுவன், விளையாடி கொண்டிருந்தபோது ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்ததாக கூறப்படுகின்றது.

தற்போது 15அடி ஆழத்தில் சிக்கியுள்ள சிறுவனை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. சிறுவனுக்கு தேவையான தண்ணீரும் மருந்தும் அளிக்கப்பட்டு வரும் நிலையில், பேரிடர் மீட்பு பணியினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

தேவையாக மருத்துவ உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், சிறுவனை உயிருடன் மீட்க முடியும் என்று பொலிசார் தரப்பில் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...