திருமண வரவேற்பு நிகழ்வில் DJ-யை சுட்டுக்கொலை செய்த விருந்தினர்கள்

Report Print Vijay Amburore in இந்தியா
283Shares

நள்ளிரவில் இசையை நிறுத்தியதற்காக கோபமடைந்த திருமண வீட்டார், DJ-யை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.

நவம்பர் 30 ஆம் தேதி நள்ளிரவில் தொடர்ந்து இசை இசைக்காததற்காக, இந்தியாவின் பஞ்சாபில் உள்ள வாலா கிராமத்தில் நடந்த திருமணத்திற்கு முந்தைய விருந்தில் 18 வயது DJ சுட்டுக் கொல்லப்பட்டார்.

கரண் சிங் என்கிற அந்த இளைஞரை சுட்டுக்கொன்றதாக 5 பேர் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

முதல் தகவல் அறிக்கையின்படி, விருந்து இரவு 7 மணியளவில் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. இரவு 10 மணிக்கு மேல் DJ-க்கள் இசைக்க அனுமதி கிடையாது என்பதால் இசை முதலில் இரவு 10 மணியளவில் நிறுத்தப்பட்டது.

ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் காற்றில் துப்பாக்கியால் சுட்டு அச்சுறுத்திய பின்னர் நள்ளிரவு வரை மீண்டும் தொடர்ந்துள்ளது.

நள்ளிரவில் மீண்டும் இசை நிறுத்தப்பட்டபோது, 5 பேரில் ஒருவர் கரண் சிங்கின் நெஞ்சுப்பகுதியில் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார்.

உடனடியாக அங்கிருந்தவர்கள் பலத்த காயமடைந்த இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பலியாகியிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக தற்போது வரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள மற்ற இரண்டு பேரை பொலிஸார் தீவிரமாக தேடிவருவதாக கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்