இரத்த கறையுடன் சிறுமியின் சடலம்! .. கொலையாளியின் பரபரப்பு வாக்குமூலம்

Report Print Fathima Fathima in இந்தியா
625Shares

ராஜஸ்தானில் 6 வயது சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் ராஜஸ்தானின் டோங்கில் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் 6 வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

அருகே மது பாட்டில்கள், தின்பண்டங்கள், இரத்த கறையும் இருந்ததால் பொலிசார் மிக தீவிரமாக விசாரணையை தொடங்கினர்.

இந்நிலையில் ட்ரக் ஓட்டுநரான கொலையாளி குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து பொலிஸ் அதிகாரியான ஆதர்ஷ் சித்து கூறுகையில், இந்த வழக்கு மிகவும் சவாலானதாக இருந்தது.

6 வயது சிறுமியை மனதில் கொண்டு பொதுமக்களிடம் விசாரித்தோம், கடைசியாக கொலையாளியிடம் விசாரித்த போது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

மதியம் 12 மணியளவில் சொக்லேட்டை காட்டி சிறுமியை பாழடைந்து பகுதிக்கு அழைத்து சென்று வன்புணர்வு செய்துள்ளார்.

சிறுமியை வெளியே விட்டால் காட்டிக் கொடுத்துவிடுவாள் என பயந்து கொலை செய்து காட்டுப்பகுதியில் வீசிவிட்டு சென்றதாக கொலையாளி வாக்குமூலம் அளித்ததாக பொலிசார் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்