டெல்லி மாணவி சீரழித்து கொலை... குற்றவாளிகளுக்கு விரைவில் தூக்கு!

Report Print Arbin Arbin in இந்தியா
744Shares

இந்திய தலைநகர் டெல்லியில் மருத்துவ மாணவி கூட்டு வன்புணர்வுக்கு இரையான வழக்கில் குற்றவாளிகளின் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற ஆயத்தமான நிலையில் ஊழியர் இல்லாதது அதிகாரிகளை சிக்கலில் தள்ளியுள்ளது.

அடுத்த 30 நாட்களுக்குள் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட வாய்ப்பிருப்பதாக சிறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி குற்றவாளிகள் உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் அளித்த மனு நிராகரிக்கப்பட்டன.

இனி ஜனாதிபதிக்கு கருணை மனு அளிப்பதே இவர்கள் முன் இருக்கும் இறுதி வாய்ப்பு. ஆனால் குற்றவாளிகளில் வினய் ஷர்மா மட்டுமே ஜனாதிபதிக்கு கோரிக்கை வைக்க முன்வந்துள்ளார்.

வினய் ஷர்மாவின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரிக்க வேண்டும் என டெல்லி அரசு கடுமையாக வாதிட்டுள்ளது.

ஜனாதிபதி இவர்களின் கருணை மனுவை நிராகரிக்க நேர்ந்தால், நீதிமன்றம் தூக்குத்தண்டனையை நிறைவேற்ற உத்தரவு வெளியிடும் என கூறப்படுகிறது.

தற்போது தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் ஊழியர் இல்லை என்பதால், சிறை அதிகாரிகள் தீவிரவாக இந்த விவகாரம் தொடர்பில் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்திய பாராளுமன்றம் மீது தாக்குதல் முன்னெடுத்த அப்சல் குரு என்பவரின் தூக்குத் தண்டனை காலகட்டத்தில், ஊழியர்கள் பற்றாக்குறை இருந்ததால், சிறை அதிகாரி ஒருவரே தூக்குத் தண்டனைக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

பவன் குப்தா, முகேஷ்சிங், வினய் சர்மா, அக்‌ஷய் தாகூர், தாம்சிங் மற்றும் சிறுவன் ஒருவன் என்பவர்களே இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள்.

இதில் விசாரணை காலகட்டத்தில் தாம்சிங் சிறையில் வைத்தே தற்கொலை செய்து கொண்டார். மேலும் கடந்த 2015 ஆம் ஆண்டு தண்டனை காலம் முடிந்து அந்த ஒரே ஒரு சிறுவன் விடுவிக்கப்பட்டான்.

எஞ்சிய நால்வருக்கும் எதிராகவே நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் திகதியே ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கிய கூட்டு பாலியல் வன்புணர்வு சம்பவம் டெல்லியில் ஓடும் பேருந்தில் அரங்கேறியது.

இதில் குற்றுயிராக மீட்கப்பட்ட மாணவி, சிகிச்சை பலனின்றி டிசம்பர் 29 ஆம் திகதி மரணமடைந்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்