பிரியங்காவை கொன்ற கொலையாளிகளுக்கு சிறையில் வழங்கப்படும் மட்டன் உணவு! அதிர்ச்சியில் மக்கள்

Report Print Raju Raju in இந்தியா
1320Shares

பிரியங்காவை கொலை செய்த நான்கு கொடூரன்களுக்கு சிறையில் மட்டன் கறியும், பருப்பு சாதமும் தரப்பட்டுள்ளது பொதுமக்கள் இடையில் அதிர்ச்சியையும், கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்த 26 வயது இளம்பெண் பிரியங்கா கடந்த வாரம் 4 பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு பின்னர் எரிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு குற்றவாளிகளும் செர்லபலி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அங்கு 4 பேருக்கும், முதல் நாள் மதியம் பருப்பு சாதம் தரப்பட்டுள்ளது. இதோடு இரவு சாப்பாட்டுக்கு மட்டன் தந்துள்ளனர். இதுதான் இப்போது சர்ச்சையாக வெடித்துள்ளது.

ஒரு பெண்ணை மிருகத்தனமாக கொலை செய்த கயவர்களை தூக்கில் போட சொன்னால், மட்டன் தந்து இருக்கிறார்களே என பொதுமக்கள் கொதித்து போயுள்ளனர்.

இதையடுத்து #HyderabadPolice என்ற ஹேஷ்டேக்கை டுவிட்டரில் ட்ரெண்டாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் பொலிசாருக்கு கண்டனம் தெரிவித்து கருத்து பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்