தமிழகத்தில் நீடிக்கும் கனமழை!... அவசர உதவி எண்கள் அறிவிப்பு- தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Report Print Fathima Fathima in இந்தியா
174Shares

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது.

சென்னை மட்டும் அல்லாமல் கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினத்திலும் கனமழை பெய்தது.

2015ம் ஆண்டு இதே நாளில் தான் கனமழை பெய்து வெள்ளத்தில் தத்தளித்த நாட்களை பலரும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

தமிழ்நாடு வெதர்மேன் என்றழைக்கப்படும் பிரதீப்பும், இன்று கனழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளார்.

உதவி எண்கள் அறிவிப்பு

சென்னையில் பொதுமக்களுக்கான உதவி எண்களை மாநகராட்சி அறிவித்துள்ளது, மழை பாதிப்பு குறித்து 044-25384520, 044- 25384530, 044- 25384540 மற்றும் 9445477205 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொள்ளவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம்

கடலூர் மாட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

கடலூரை பொறுத்த வரை நேற்று ஒரே நாளில் 12 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

வில்வநகர், கூத்தப்பாக்கம், வன்னியர்பாளையம், வண்ணாரப்பாளையம் உள்பட 80-க்கும் மேற்பட்ட நகர்களில் உள்ள 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றிலும் மழைநீர் தேங்கி நின்றது. ஒருசில வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பெரும் அவதிக்குள்ளாகினர்.

தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக 3 மாவட்டங்களிலும் விட்டு விட்டு சாரல் மழையும், கனமழையும் பெய்தது. இதன் காரணமாக தென் மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணை முழு கொள்ளளவையும் எட்டி நிரம்பியது.

இதனால் தாமிரபரணி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது, எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்