பிரியங்கா மீது தான் தவறு! அவர் ஏன் இப்படி செய்யணும்? பிரபலத்தின் பேச்சால் அதிர்ச்சியடைந்த மக்கள்

Report Print Raju Raju in இந்தியா

பிரியங்கா ரெட்டி கொலை சம்பவம் நாட்டை உலுக்கியுள்ள நிலையில் தவறு அவர் மீது தான் என்பது போல மாநில அமைச்சர் பேசியது பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி நேற்று காலை எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

அவர் கற்பழித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரியங்காவுக்கு நடந்த கொடூரம் இந்தியாவையே உலுக்கியுள்ள நிலையில் டுவிட்டரில் பிரியங்கா ரெட்டி மரணத்துக்கு நீதி வேண்டும் என டிரண்ட் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இது குறித்து மாநில உள்துறை அமைச்சர் முகமது மஹ்முது அலி கூறுகையில், குற்றங்களை தடுக்க பொலிஸ் தயார் நிலையில் உள்ளது, ஆனால் பிரியங்கா 100 என்ற காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்யாமல் அவர் சகோதரிக்கு போன் செய்தது அவர் தவறு, அப்படி அவர் 100-க்கு போன் செய்திருந்தால் காப்பாற்றப்பட்டிருப்பார்.

அவசர உதவி எண் 100 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நிச்சயம் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாருக்கு நீதி கிடைக்கும் என கூறினார்.

இதனிடையில் பிரியங்காவை குறை கூறும் வகையில் அமைச்சர் பேசிய பேச்சு பலரையும் கோபமடைய செய்துள்ளது.

இது தொடர்பாக சமூகவலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்