மிகவும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பிரியங்கா! முதற்கட்ட பிரேதபரிசோதனையில் பகீர் தகவல்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் இளம் பெண் பிரியங்கா கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் முதற்கட்ட பிரேத பரிசோதனை குறித்து பிரபல ஆங்கில ஊடகம் பிரத்யேகமாக வெளியிட்டுள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்த பிரியங்கா ரெட்டி என்ற 27 வயது பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.

அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுவதால், அந்த கொடூரர்களை சும்மா விடக்கூடாது, அவர்களுக்கு சரியான தண்டனை கொடுக்க, ஊடகங்கள் இதை சாதரணமாக விட கூடாது, என்று திரைப்பிரபலங்கள் தங்கள் வேதனையை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல ஆங்கில ஊடகமான Republic பிரியங்காவின் முதற்கட்ட பிரேத பரிசோதனை குறித்து செய்தி வெளியிட்டுள்ளது. அதில் பொலிசாரி விசாரணையில் முதற்கட்ட பிரேதபரிசோதனை அறிக்கை கிடைத்துள்ளது.

அதில் பாதிக்கப்பட்ட பிரியாவின் மீது முதலில்ல மண்ணெண்ணய் ஊற்றப்பட்டுள்ளது. அதன் பின் அவர் மீது போர்வையை போர்த்தி, தீ பற்ற வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பெண்ணிற்கு 70 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டு உடல் கருகி இறந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவத்தில் தற்போது வரை மொகமத் பாஷா(டிரைவர்), நவீன்(டிரைவர்), கேஷவலு(கிளீனர்), சிவா(கிளீனர்) நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்,

இதைத் தொடர்ந்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் ஒன்று பிரியங்கா ரெட்டியின் பெற்றோரிடம் கேட்ட போது, அதிகாரிகள் மிகவும் தவறான முறையில் பேசுகிறார்கள், பொலிசார் அலட்சியம் காட்டுவதாக மிகவும் வேதனையுடன் கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்