இலங்கை ஜனாதிபதி கோட்டாபய இந்தியா வந்துள்ள நிலையில் ஈழத்தமிழர்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

Report Print Raju Raju in இந்தியா

இலங்கையில் உள்ள தமிழர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்தியா வந்துள்ள அந்நாட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ கூறியுள்ளார்.

இலங்கையின் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற கோட்டாபய ராஜபக்‌ஷ முதல் வெளிநாட்டு சுற்றுபயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார்.

இந்தியாவுக்கு வந்த அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து அவர் பேசினார். பின்னர் இருவரும் கூட்டாக சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய நரேந்திர மோடி, இலங்கை மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும்.

இந்தியா-இலங்கை இடையே கடல்வழி வணிகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இலங்கையில் பயங்கரவாதத்தை ஒடுக்க ரூ.359 கோடி நிதி (50 மில்லியன் டொலர்கள்) அளிக்கப்படும். இலங்கையின் கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டங்களுக்காக 400 மில்லியன் டொலர்கள் வழங்கப்படும் என கூறியுள்ளார்.

பாதுகாப்பு விவகாரத்தில் ராணுவ ரீதியாகவும் இலங்கையுடன் இணைந்து இந்தியா செயல்படும். ஈழத்தமிழர்களுக்கு சமஉரிமை, நீதி, மரியாதையை இலங்கை அரசு அளிக்கும் என நம்புகிறேன்

ஈழத்தமிழர்களுக்கு மத்திய அரசின் உதவியுடன் மேலும் 14 ஆயிரம் வீடுகள் கட்டி தரப்படும் என கூறினார்.

இதையடுத்து பேசிய கோட்டாபய ராஜபக்‌ஷ, இலங்கையில் உள்ள தமிழர்களின் படகுகளை விடுவிக்கப்படும் என அறிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்