குட்டி யானையின் சடலத்தை வைத்து பாசப்போராட்டம் நடத்தும் தாய் யானை! கண்கலங்க வைக்கும் புகைப்படம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் இறந்த குட்டியிடம் யாரையும் நெருங்க விடாமல் தாய் யானை இரண்டு நாட்களாக பாசப்போராட்டம் நடத்தி வருகிறது.

நீலகிரி மாவட்டத்தின் பந்தலூரில் உள்ள சேரம்பாடி நாயக்கன்சோலை சுப்ரமணியர் கோயில் அருகில் உள்ள வனப்பகுதியில் நேற்று முன்தினம் சுமார் ஒரு வயது மதிக்கத்தக்க குட்டி யானை ஒன்று இறந்துள்ளது.

இதையறிந்த வனத்துறையினர் இறந்த குட்டி யானையை கயிற்றில் கட்டி இழுத்து சாலையோரத்தில் வைத்துள்ளனர்.

இதனை கண்டு ஆத்திரமடைந்த தாய் யானை வனத்துறையினரை ஆக்ரோஷமாக விரட்டி தாக்க முயன்றது. இதனால் வனத்துறை மற்றும் பொதுமக்கள் ஓட்டம் பிடித்து தப்பியுள்ளனர்.

மேலும் தாய் யானை அப்பகுதியில் இருந்த வனத்துறை வாகனங்கள், பைக்குகள் மற்றும் கோயிலை உடைத்து சேதப்படுத்தியது.

இதையறிந்த பொலிசார், சம்பவ இடத்திற்கு சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து நாயக்கன்சோலை பகுதியில் இரண்டாவது நாளாக நேற்றும் இறந்த குட்டி யானை அருகே வனத்துறையினரை நெருங்க விடாமல் தாய் யானை பாசப்போராட்டம் நடத்தி சாலையில் நின்றபடி உள்ளது.

இதனால் அந்த பகுதி மக்கள் மாற்று சாலையை பயன்படுத்தி வெளியில் செல்கின்றனர்.

இறந்த குட்டியானையை நெருங்கவிடாமல் தாய் யானை நடத்தும் பாசப்போராட்டம் எப்போது முடிவுக்கு வரும் என தெரியாத நிலை உள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்