உடல் முழுவதும் சிகரெட் சூடு... தோட்டத்தில் கிடந்த கர்ப்பிணியின் சடலம்

Report Print Vijay Amburore in இந்தியா

உடல் முழுவதும் சிகரெட் சூட்டுடன் கர்ப்பிணி பெண் மர்மமான முறையில் இறந்துகிடந்துள்ள சம்பவம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ரோஜா என்பவர் தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது ராஜேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலிக்க ஆரம்பித்துள்ளார்.

ஒருகட்டத்தில் ரோஜா கர்பமடைந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து ரோஜா தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு ராஜேஷிடம் கூறியிருக்கிறார். அதற்கு சம்மதம் தெரிவித்து ராஜேஷும், ரோஜாவை தன்னுடன் அழைத்து சென்றுள்ளார்.

இந்த நிலையில் உடல் முழுவதும் சிகரெட் சூட்டு காயங்களுடன், இளம்பெண் ஒருவர் தோட்டத்தில் தூக்கில் தூங்குவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதோடு, இறந்து கிடந்த இளம்பெண் ரோஜா என்பதையும் அடையாளம் கண்டறிந்தனர்.

இந்த சம்பவம் அறிந்த ரோஜாவின் உறவினர்கள், ராஜேஷ் திருமண ஆசை காட்டி ரோஜாவை கொடுமைப்படுத்தி கொலை செய்துவிட்டதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ராஜேஷை கைது செய்தனர்.

விசாரணையில் ராஜேஷ் ஏற்கனவே திருமணமானவர் என கூறப்படுகிறது. இதற்கிடையில் ரோஜா கூட்டு துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர். இருந்தாலும், பிரேத பரிசோதனைக்கு பின்னரே முழு விவரங்கள் தெரியவரும் என பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்