வெளிநாட்டில் இருந்த கணவன்! ஊரில் வசித்து வந்த மனைவிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி.. வெளியான புகைப்படம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தின் பெரம்பலூர் பகுதியில் ஒரே நாளில் நான்கு இடங்களில் கொள்ளை நடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் அருகே அரணாரை ஏ.வி.ஆர். நகரில் உள்ள வீட்டில் வசித்து வருபவர் பானு (45). இவருடைய கணவர் பாலசுப்ரமணி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த தம்பதியின் மகள் லெட்சுமி பாலா, தனியார் வேளாண் கல்லூரியில் படித்து வருவதால், அவருடன் பானு ஏ.வி.ஆர். நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் லெட்சுமி பாலா கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்வி சுற்றுலாவிற்கு சென்று விட்டார். இந்நிலையில் பானு வீட்டை பூட்டி விட்டு காரைக்குடிக்கு சென்றார்.

நேற்று காலை ஏ.வி.ஆர். நகரில் பானு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

இது குறித்து தகவல் அறிந்து அதிர்ச்சியடைந்த பானு பதறியபடி வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 16½ பவுன் நகைகள், ரூ.30 ஆயிரம், வெள்ளி குத்துவிளக்கு, 4 ஜோடி வெள்ளி கொலுசுகள், விலையுயர்ந்த கைக்கடிகாரம், டி.வி. ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

கணவர் வெளிநாட்டில் கஷ்டப்பட்டு வேலை செய்து சம்பாதிக்கும் நிலையில் இவ்வளவு நகைகள், பணம் மற்றும் இதர பொருட்கள் காணாமல் போனதை நினைத்து பானு கண்ணீர் விட்டார்.

இதையடுத்து அந்த வீட்டிற்கு விரல்ரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர்.

இதே போல அந்த பகுதியில் உள்ள மூன்று வீடுகளில் நகைகள், பணம் மற்றும் வெள்ளிப்பொருட்கள் நேற்று கொள்ளையடிக்கப்பட்டன.

அதாவது மொத்தமாக 25 பவுன் நகைகளும், ரூ.45 ஆயிரம் மற்றும் வெள்ளிப்பொருட்கள் திருடு போயின.

சம்பவம் குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில் ஒரே நாளில் பெரம்பலூர் பகுதியில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் ஒரே கும்பலாக இருக்கலாம் என அவர்கள் சந்தேகிக்கின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்