தங்கையின் ஆசை கணவனை கொன்றது ஏன்? அண்ணனின் பரபரப்பு வாக்குமூலம்

Report Print Fathima Fathima in இந்தியா

நெல்லையில் தன்னுடைய தங்கையை காதல் திருமணம் செய்ததால் இளைஞரை தலை துண்டித்து கொன்ற குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

நெல்லையின் மறுகால்குறிச்சி என்ற கிராமத்தை சேர்ந்தவர் நம்பிராஜன், இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வான்மதி என்பவருக்கும் காதல் மலர்ந்தது.

இவர்களது காதலுக்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், வீட்டைவிட்டு வெளியேறி கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நம்பிராஜன் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இதுதொடர்பில் பொலிசார் விசாரணை நடத்தியதில், சம்பவதினத்தன்று முத்துப்பாண்டியன் என்பவர் நம்பிராஜனுக்கு போன் செய்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில் வான்மதியின் அண்ணன் செல்லசாமி (26), உறவினர்கள் செல்லத்துரை (24), முருகன் (25) மற்றும் முத்துப்பாண்டியன், விசுவநாதன் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

செல்லசாமி அளித்துள்ள வாக்குமூலத்தில், மறுகால்குறிச்சியில் நம்பிராஜன் மற்றும் அவரது நண்பர்கள் தனி குரூப்பாகவும், நாங்கள் தனி குரூப்பாகவும் செயல்பட்டு வந்தோம்.

இரண்டு தரப்பினருக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டு வந்தது. நம்பிராஜன் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் ஏராளமான வழக்குகள் உள்ளன.

இந்நிலையில் நம்பிராஜன் என் தங்கையை காதலித்தார், நான் என் நண்பர்களுடன் சென்று எச்சரித்துவிட்டு வந்தேன்.

அப்போது, என் தங்கையை தூக்கிக்கொண்டு போய் திருமணம் செய்வதாக சவால் விட்டார், அதற்குள் உன் தலையை எடுத்து விடுவேன் என்று பதிலுக்கு நாங்களும் சவால் விட்டோம்.

ஆனால் சொன்னபடி நம்பிராஜன் என் தங்கையை திருமணம் செய்து கொண்டார், இதனால் என் ஆத்திரம் மேலும் அதிகரித்தது.

அவன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து கொலை செய்ய திட்டமிட்டேன், என் நண்பர்களையும் சேர்த்துக் கொண்டு ரயில் விபத்தில் இறந்தவர் போல நாடகமாக திட்டமிட்டோம், ஆனால் விசாரணையில் சிக்கிக் கொண்டோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்