மின்னல் வேகத்தில் மான் குட்டியை கவ்விய ராட்சத மலைப்பாம்பு..! உறைய வைக்கும் வீடியோ காட்சி

Report Print Vijay Amburore in இந்தியா

தண்ணீர் குடிக்க வந்த மான் குட்டியை ராட்சத மலைப்பாம்பு ஒன்று மின்னல் வேகத்தில் பிடித்து வளைத்துள்ளது.

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

கார்வா காட்டில் சதுப்பு நிலப்பகுதியில் எடுக்கப்பட்ட அந்த வீடியோ காட்சியில், 4 மான்கள் தண்ணீர் குடிப்பதற்காக சேறு நிறைந்த ஒரு குட்டையை சுற்றிலும் நின்று கொண்டிருக்கின்றன.

அப்போது இரண்டு மான் குட்டிகள் மட்டும் தண்ணீர் குடிப்பதற்காக நீருக்குள் தலையை நீட்டுகின்றன. எதிர்பாராத நேரத்தில் உள்ளே பதுங்கியிருந்த ராட்சத மலைப்பாம்பானது, மின்னல் வேகத்தில் அதில் ஒரு குட்டியை கழுத்தை கவ்வி உள்ளே இழுத்து போடுகிறது.

நவம்பர் 21 அன்று நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சியினை மத்திய சாந்தா வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்