புலிகளுக்கு தன்னையே இரையாக்க முயன்ற நபர்: பதறிப்போன சுற்றுலாப்பயணிகள்

Report Print Vijay Amburore in இந்தியா

மத்திய பிரதேசத்தில் தற்கொலை செய்துகொள்வதற்காக புலி அடைப்புக்குள் நுழைய முயன்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தூரின் கம்லா நேரு மிருகக்காட்சிசாலையில் உள்ள புலிகள் அடைப்புக்குள், 43 வயதான ஒருவர் தற்கொலை செய்துகொள்வதற்காக நுழைய முயன்றுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சுற்றுலாப்பயணிகள் உடனடியாக அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

விரைந்து செயல்பட்ட அதிகாரிகள், எந்தவொரு அசம்பாவித சம்பவமும் நிகழுமுன் அவரைப் பிடித்து காப்பற்றினர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்த அந்த நபரிடம் தற்கொலைக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜலா என்கிற அந்த நபர் கடன் தொல்லை காரணமாகவே வெள்ளிக்கிழமை மதியம், 25 அடி உயர அடைப்பின் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்