சமையலறையில் இருந்து வெளியேறிய துர்நாற்றம்: திரைப்பட பாணியில் அம்பலமான கொலை

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தில் பெண் ஒருவர் தமது கணவரை கொன்று புதைத்து, அதன் மீது சமையலறை கட்டிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மத்தியபிரதேசத்தின் கோட்மா பகுதியில் குடியிருந்து வந்த 34 வயது மோஹித் என்பவரே மனைவியால் கொல்லப்பட்டவர்.

வழக்கறிஞரான கணவரை காணவில்லை என கூறி அவரது மனைவி பிரதிமா பனவால் பொலிசாரை நாடியுள்ளார்.

இதனிடையே தமது சகோதரர் மாயமானது தொடர்பில் அர்ஜுன் என்பவர் பிரதிமாவிடம் விசாரித்துள்ளார்.

ஆனால் கணவரின் தம்பியான அர்ஜுனை அவர் குடியிருப்புக்கு உள்ளே அனுமதிக்காமல், தகாத வார்த்தையால் திட்டி அனுப்பியுள்ளார்.

இச்சம்பவம் உறவினர்களுக்கு சந்தேகத்தை தரவே, பொதுமக்களுடன் இணைந்து பிரதிமாவின் குடியிருப்புக்குள் நுழைய முயன்றுள்ளனர்.

பூட்டிய கதவை உடைத்து உள்ளே நுழைந்த பொதுமக்களுக்கு துர்நாற்றம் மூக்கை துளைத்துள்ளது. உடனடியாக பொலிசாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

தகவல் அறிந்து வந்த பொலிசார், துர்நாற்றம் வீசிய சமையலறை பகுதியில் தோண்டியுள்ளனர். அங்கே மோஹித்தின் சிதைந்த உடலை கண்டெடுத்துள்ளனர்.

சடலத்தை உடற்கூராய்வுக்கு அனுப்பிய பொலிசார், பிரதிமாவை கைது செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், பிரதிமா தமது கணவரை அக்டோபர் 22 ஆம் திகதி கொன்றதாகவும்,

தமிழ் திரைப்பட பாணியில் அதன் மீது சமையலறை கட்டியதாகவும், பின்னர் கணவர் மாயமானதாக கூறி பொலிசாரை நாடியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்