மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசனுடன் திமுக தலைவர் ஸ்டாலின் சந்திப்பு

Report Print Basu in இந்தியா

சென்னையில் அப்போலோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

2016ம் ஆண்டில் படப்பிடிப்பின் போது, கமல்ஹாசனுக்கு நிகழ்ந்த விபத்தின் போது கால்முறிவு ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அப்போது காலில் டைட்டேனியம் பிளேட் பொருத்தப்பட்டது.

அரசியல் மற்றும் சினிமாவில் அவருக்கு இருந்த தொடர் வேலைப்பளு காரணமாக அக்கம்பியை அகற்றுவதற்கானச் சூழல் அமையாமல் தள்ளிப் போய்க்கொண்டிருந்தது.

மருத்துவர்களின் ஆலோசனைப்படி இன்று (22ம் திகதி) அக்கம்பியை அகற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்பட இருக்கிறது என மக்கள் நிதி மய்யத்தின் துணைத்தலைவர் மகேந்திரன் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று கமலஹாசனுக்கு காலில் இருந்து கம்பியை அகற்றும் அறுவை சிசிச்சை நல்லபடியாக நடந்துமுடிந்ததாகவும், அவர் 3 நாள் ஓய்வெடுப்பார் எனவும், கமலஹாசன் நலமாக இருக்க வேண்டும் என வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்து மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இத்தகவல் வெளியானதை அடுத்து மரியாதை நிமித்தமாகவும், நீண்ட கால நண்பர் என்ற அடிப்படையிலும் திமுக தலைவர் மு.க.ஸடாலின், அப்போலோ மருத்துவமனைியல் உள்ள கமலஹாசனை நேரில் சென்று சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்