தமிழர்களை உலுக்கிய கொலை சம்பவம்- 20ஆண்டுகளாக சிக்காத ஒரு குற்றவாளி!

Report Print Abisha in இந்தியா

புதுச்சேரியில், 1999ஆம் ஆண்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட பார்வதியின் வழக்கில் இன்று வரை ஒரு குற்றவாளி சிக்கவில்லை.

புதுச்சேரியை சேர்ந்த நடராஜர் ஐய்யர், இவரது மகள் பார்வதி. அவர், பார்க்க மிகவும் அழகாகவும் பலரது கவனத்தை ஈர்ப்பவராகவும் இருந்தார். தமிழர்களான இவர்கள் குடும்பம், அரவிந்தர் ஆசிரமாம் செல்லும் வழக்கம் கொண்டவர்களாக இருந்தனர். அங்கு பழக்கமானவர்கள் தான் பிரேம்சன் ஷா குடும்பத்தினர்.

பிரேம்சன்ஷா- பத்மாவதி தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் மூத்தவன் பெயர், ரவி ஷா. இராண்டாவது மகன் பெயர் கமல் ஷா. பிரேம்சன் ஷா குடும்பம் குஜராத்திலிருந்து புதுச்சேரிக்கு வந்தவர்கள். வைர வியாபாரம் தான் இவர்களது முக்கிய தொழில்.

இவர்களும் அரவிந்த ஆசிரமத்தின் பக்தர்கள். எனவே இரு குடும்பமும் நன்கு பழகி வந்தது. இந்நிலையில், பிரேம்சன் ஷா தனது மூத்த மகனான ரவிஷாவிற்கு பார்வதியை திருமணம் செய்து வைக்க நடராஜ் ஐயரிடம் கேட்டார்.

பிரேம்சன் ஷா குடும்பம் நன்கு தெரித்தவர்கள் என்பதாலும், வசதியான குடும்பம் என்பதாலும் இதற்கு அவர் ஒப்புக்கொண்டார் நடராஜ். மேலும், பார்வதி ரவிஷாவை சிறுவயதிலிருந்து பார்த்து பழகியதால் அவரும் திருமணத்திற்கு சம்மதித்தார்.

புதுச்சேரியே ஆச்சரியபடும் வகையில் ரவிஷா- பார்வதி திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் அண்ணனின் அருகில் நின்று கொண்டு சிரிப்பு மாறாமல் அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருந்தான் கமல்ஷா.

ஆனால், கமல்ஷாவிற்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. ஏனெனில், கமல்ஷா சிறுவயதிலிருந்து பார்வதியை காதல் வலையில் வீழ்ந்த பலமுறை முயற்சித்தும் நடக்கவில்லை. இதனால், கமல் ஷா கோவத்தை தனக்குள் அடக்கி கொண்டு திருமண நிகழ்ச்சியில் சிரித்தப்படி பங்கேற்றான்.

திருணம் முடிந்து சில நாட்களிலேயே கமல்ஷாவின் குணம் மோசமாக மாறியது. அவன் பார்வதியை தொடர்ந்து சித்தரவதை செய்து வந்தான்.

தொடர்ந்து சம்பவம் நடந்த அந்த நாள் இரவில், பார்வதியை தனது ஆசைக்கு பலியாகினான் கமல் ஷா. அதன்பின் பார்வதி உயிருக்கு போராடி கொண்டிருக்கும்போது பொலிசாருக்கு அழைத்து தங்கள் வீட்டில் கொள்ளை நடந்ததாக தெரிவித்தான்.

வீட்டிற்கு விரைத்து வந்த பொலிசார், பார்வதி கொல்லப்பட்டு கிடப்பதை கண்டு விசாரணை துவங்கினர். அப்போது, கமல்ஷா எந்த பதற்றமும் இன்றி பேசியுள்ளான். பொலிசாருக்கு சந்தேகம் வலுக்கவே அவனிடம் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

அதன்பின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. அதில், பார்வதி பலவந்தமாக பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து பார்வதி குடும்பத்தினர், தனது மகளை புகுந்த வீட்டில் சில காலமாக சரியாக நடத்தவில்லை. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் கொடுத்தனர்.

உடனவே பொலிசார் பிரேசன் ஷா குடும்பத்தினரான ரவி ஷா, பத்மாவதி ஷா மற்றும் கமல் ஷா ஆகியோரை கைது செய்தனர். பத்மாவதிஷா கமல்ஷாவின் உண்மை முகம் தெரிந்தும் அதற்கு உடந்தையாக இருந்துள்ளார். மேலும், ரவி ஷா தம்பி தனது மனைவியை பலாத்காரம் செய்வதை அறிந்தும் வேடிக்கை பார்த்துள்ளான்.

புதுச்சேரி முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. அந்த நேரத்தில் பார்வதி ஷாவின் கணவர் ரவிஷா சிறையிலிருந்து தப்பினான்.

இச்சம்பவம் ஊடகங்கள் மூலம் வெளி உலகிற்கு தெரியவர மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

அதன்பின் கமல்ஷா மற்றும் பத்மாவதியை 2000ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் திகதி குற்றவாளிகள் என்று அறிவித்து, கமல்ஷாவிற்கு தூக்கு தண்டனையும், பத்மாவதிக்கு இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது.

இரண்டுபேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். நீதிமன்றமோ பத்மாவதிக்கு தண்டனையை உறுதி செய்தது. கமல்ஷாவிற்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

ஆயுள் கைதியாக சிறையில், இருந்த கமல்ஷா 2008ஆம் ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்தான். பத்மாவதி தண்டனை காலம் முடிந்த பின் குஜராத்திற்கு திரும்பி சென்றார். சில ஆண்டுகளில் அவரும் மரணமடைந்தார்.

ஆனால், இந்த வழங்கில் ரவி ஷா இன்றுவரை தேடப்படும் குற்றவாளியாக உள்ளார். மர்மம் விலகாமல், உள்ள இந்த வழக்கில் இன்றுவரை பொலிசாரால் தீர்வு காண இயலாமல் உள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்