கை, கால்கள் பிணைக்கப்பட்டு விமானத்தில் கொண்டுவரப்பட்ட 150 பயணிகள்: அம்பலமாகும் பகீர் பின்னணி

Report Print Arbin Arbin in இந்தியா

சட்டவிரோதமாக குடியேறியதாக கூறி அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்தியர்களை தனி விமானத்தில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொண்டு வந்ததாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

பிணைக்கப்பட்ட நிலையில் கொண்டுவரப்பட்ட அந்த 150 இந்தியர்களும் டெல்லி விமான நிலையத்தில் வைத்தே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்க அதிகாரிகள் தங்களை கொலை குற்றவாளிகள் போன்றே நடத்தியதாக வெளியேற்றப்பட்ட 150 இந்தியர்களும் தெரிவித்துள்ளனர்.

அரிசோனா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட தனி விமானமானது வங்கதேசம் வழியாக புதனன்று பகல் 7.30 மணியளவில் டெல்லி வந்து சேர்ந்துள்ளது.

அமெரிக்க கனவு பாதியில் கரைந்தது தொடர்பிலே பெரும்பாலான இந்தியர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்ட 25 வங்கதேச நாட்டவர்களும் இவருடன் பயணித்துள்ளனர். 24 மணி நேரம் நீண்ட அந்த விமான பயணமானது வாழ்க்கையில் மறக்கவே முடியாத கொடூர அனுபவம் என தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் பஞ்சாப், ஹரியானா மற்றும் குஜராத் மாநிலங்களை சேர்ந்த இளைஞர்களே அமெரிக்க கனவுடன், முகவர்களுக்கு 15 முதல் 25 லட்சம் ரூபாய் வரை அளித்து விசா பெற்றுள்ளனர்.

அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் 19 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.

இந்த ஆண்டில் அமெரிக்காவில் இருந்து சட்டவிரோத குடியேறுதல் உள்ளிட்ட காரணங்களுக்காக வெளியேற்றப்படும் இரண்டாவது குழு இவர்கள்.

புதனன்று டெல்லி திரும்பியவர்களில் 142 ஆண்களும் 3 பெண்களும் இருந்துள்ளனர்.

அரிசோனா, கலிபோர்னியா, டெக்சாஸ், ஜார்ஜியா, நியூ ஜெர்சி மற்றும் மிசிசிப்பி ஆகிய இடங்களில் சட்டவிரோதமாக பணியாற்றியதாக பொலிசார் கண்டறிந்ததை அடுத்து கைது செய்யப்பட்ட இவர்கள் பின்னர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்