இருட்டு அறையில் சிறுமிகளை அடைத்து வைத்து கொடுமை! சாமியார் நித்தியானந்தா வெளியிட்டுள்ள வீடியோ

Report Print Raju Raju in இந்தியா

சாமியார் நித்தியானந்தா வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டார் என கூறப்படும் நிலையில் தான் எங்கும் ஓடி ஒளியவில்லை என்றும் தற்போது இமயமலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பெங்களூரை சேர்ந்த ஜனார்த்தன சர்மா என்பவர் தனது 3 மகள்களையும் நித்தியானந்தாவுக்கு சொந்தமான கல்வி நிறுவனத்தில் சேர்த்துள்ளார். அவரது அனுமதி இல்லாமல் 3 மகள்களையும் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஆசிரமத்துக்கு மாற்றி உள்ளனர்.

இந்நிலையில் தன் மகள்களை மீட்க கோரி குஜராத் பொலிசில் சர்மா புகார் அளித்த நிலையில் அவரின் இரண்டு மகள்கள் மீட்கப்பட்டனர்.

இன்னொரு மகள் லோபா பெற்றோருடன் செல்ல மறுப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையில் குழந்தைகளை கடத்தி அவர்கள் மூலம் ஆசிரமத்துக்கு நிதி திரட்டியதாக நித்தியானந்தாவை பொலிசார் தேடி வருகின்றனர்.

அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றிருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.

இவ்வளவு சர்ச்சைகளுக்கு மத்தியில் நித்தியானந்தா பேஸ்புக்கில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில், எனது அனைத்து குரு குலத்திலும் அனைத்து பெற்றோர்களுக்கும் அவர்களது குழந்தைகளிடம் எப்போது வேண்டுமானாலும் பேச அனுமதி உள்ளது.

இந்தியாவில் நீதியைப் பெற நீண்ட காலமாகும், எனது சீடர்களுக்கு கடும் துன்புறுத்தல் அளிக்கப்படுகிறது. இதுபோன்ற தொடர் துன்புறுத்தல்கள் மற்றும் நெருக்கடிகள் இனி எதிர்காலத்தில் ஏற்படாமல் இருக்க உலகில் எங்காவது ஒரு மூலையில் காணி நிலம் எனக்கு அளிக்க வேண்டும்.

நான் தற்போது இமயமலையில் இருக்கிறேன். மிகப்பெரிய ஆன்மீக செயலை செய்து முடிப்பதற்காக நான் உயிரோடு இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதனிடையில் நித்தியானந்தா ஆசிரமத்தில் கைது செய்யப்பட்ட பெண் நிர்வாகிகளிடம் 2வது நாளாக விசாரணை நடத்தப்பட்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அந்த விசாரணையில், நித்தியானந்தா ஆசிரமத்திற்கு பின்புறம் உள்ள ஒரு தனி இருட்டு அறையில் பல சிறுவர் சிறுமிகள் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்