டிப்டாப் உடையணிந்து அம்மனை வேண்டி, நகைகளை அபேஸ் செய்த நபர் - வெளியானது சிசிடிவி காட்சி

Report Print Abisha in இந்தியா

பயபக்தியுடன் அம்மனை கும்பிட்டு நகைகளை திருடும் கொள்ளையன் சிசிடிவி காட்சியில் சிக்கியுள்ளான்.

தொலுங்கான மாநிலத்தில் அமைந்துள்ள துர்கை அம்மன் கோயிலில் நேற்று திருட்டு சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதில், அம்மனுக்கு அணிவித்திருந்த கீரிடம், தங்க சங்கலி, கைகளில் இருந்த காப்பு ஆகியவை மாயமாகியதாக பொலிசாரிடம் கோவில் நிர்வாகம் தெரிவித்தது.

இதனால், பொலிசார் கோவில் நிர்வாகிகள், அர்ச்சகர் ஆகியோரிடம் தீவிர விசாரணையில் இறங்கினர். ஆனால், எந்த தகவலும் கிடைக்கவில்லை. மேலும், கோவில் நடை திறந்திருக்கும் போது பக்தர்கள் வேடத்தில் யாரோ திருடியிருக்கலாம் என்று பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

எனவே கோவில், கர்பகிரகத்தில் உள்ளே அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கமெராவை ஆய்வு செய்தனர். அப்போது டிப்டாப் உடை அணிந்த நபர் ஒருவர் மிகவும் பயபக்த்தியோடு அம்மனை தரிசித்துகொண்டு.

சுற்றும் முற்றும் பார்த்தவர் அம்மன் அணிந்திருந்த நகைகளை ஒவ்வொன்றாக கழற்றி தன் பேன்ட் பாக்கெட்டுகளுக்குள் போட்டுக்கொண்டார். கீரிடத்தை எடுத்து தன் உடலின் மறைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார். அந்த நபர் உள்ளே வருவதில் இருந்து நகைகளை எடுத்துச் செல்வது வரை அனைத்தும் சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது.

அந்த நபர் இறுதிவரை கமெராவை பார்க்கவில்லை. சிசிடிவி காட்சிகள் கொண்டு பொலிசார் தற்போது விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்