இந்தியாவில் பெண்களிடம் அத்துமீறிய அவுஸ்திரேலிய இளைஞர்: கொடூரமாக தாக்கிய கிராமவாசிகள்

Report Print Vijay Amburore in இந்தியா

இந்தியாவிற்கு சுற்றுலாவந்த அவுஸ்திரேலிய இளைஞர், மது போதையில் பெண்களிடம் தவறாக நடக்க முயன்றதால் ஆத்திரமடைந்த கிராமவாசிகள் மின்கம்பத்தில் கட்டிவைத்து கடுமையாக தாக்கியுள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் மெல்போர்னைச் சேர்ந்த வில்லியம் ஜேம்ஸ் என்கிற இளைஞர் கடந்த செப்டம்பர் 17ம் திகதி முதல் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இவர் இரண்டு தினங்களுக்கு முன் கர்நாடக மாநிலத்தில் பதாமிக்கு அருகே உள்ள ஒரு கிராமத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு பேருந்து நிலையத்திற்கு வரும் பெண்களிடம் மது போதையில் தவறாக நடக்க முயன்றதாக தெரிகிறது. இதனை தடுக்க முயன்ற ஆண்களையும் ஜேம்ஸ் தாக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கிராமவாசிகள் கைகால்களை கயிற்றால் கட்டி மின்கம்பத்தில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர்.

Yahoo News

இந்த நிலையில் சம்பவம் அறிந்து விரைந்த பொலிஸார், படுகாயமடைந்த ஜேம்ஸை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அவுஸ்திரேலிய தூதரகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர். அதேசமயம் தாக்குதல் நடத்தியவர்களை தற்போது கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியிட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்