சிதைந்த நிலையில் 6 நாட்களாக மரத்தில் தொங்கிய சடலம்

Report Print Vijay Amburore in இந்தியா

வீட்டிலிருந்து மாயமான் விவசாயி 6 நாட்களுக்கு பின், தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் அடர்ந்த காடுகளுக்கிடையே ஒரு மரத்தில், முதியவர் ஒருவரின் சடலம் சிதைந்த நிலையில் கிடப்பதாக வனத்துறை அதிகாரிகள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது, தூக்கில் தொங்கிய முதியவரின் பெயர் 62 வயதான துளசிராம் ஷிண்டே என்பது தெரியவந்தது. பிம்பலோலி கிராமத்தை சேர்ந்த துளசிராம், தனது வயலில் விவசாயம் செய்த சோயாபீன் பயிர் அண்மையில் பெய்த பருவகால மழையில் அழிந்துள்ளது.

இதனால் அவருடைய குடும்பமும் வறுமை நிலைக்கு சென்றுள்ளது. இதனை நினைத்து பெரும் கலக்கத்துடன் காணப்பட்ட துளசிராம், 13ம் திகதியன்று மாயமாகியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அன்றைய தினமே அவர் கயிற்றால் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். சடலம் தொங்கிய நிலையில் கிடந்தாலும், அவர் தற்கொலை செய்துகொண்ட இடம் அடர்ந்த காட்டுப்பகுதியில் இருந்ததால் யாராலும் கண்டுபிடிக்க முடியாமல் இருந்திருக்கலாம் என பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் இதன் பின்னணியில் வேறு யாரேனும் இருக்கிறார்களா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்