இளம் வயது மகளின் அந்த முடிவு: கழுத்தை நெரித்து கொலை செய்த தாயார்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் காதலருடன் வெளியேற முடிவு செய்த மகளை அவரது தாயார் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் 40 வயதான வகேலா என்ற பெண்மணியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

நிர்மலா அசோக் வகேலா என்ற 23 வயது இளம்பெண்ணே காதல் விவகாரம் தொடர்பில் தாயாரால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவர்.

தமக்கு உடன்பாடில்லாத காதல் விவகாரத்தில் மகள் உறுதியாக இருந்ததை அடுத்தே கொலை செய்ய தாயாரை தூண்டியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மகளை கொலை செய்த பின்னர் அவரே பொலிசாரிடம் இது தொடர்பில் தகவல் அளித்துள்ளார். துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்றதாக அவர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

காதலருடன் நிர்மலா வெளியேற முடிவு செய்ததை அறியவந்த தாயார் வகேலா, ஞாயிறன்று இரவு சுமார் 9 மணியளவில் இந்த விவகாரம் தொடர்பில் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து மகளின் கழுத்தில் துப்பட்டாவால் நெரித்துள்ளார். மகள் காதலனுடன் வெளியேறினால் ஏற்படும் அவமானம் தாங்கமுடியாது என்பதாலையே கொலை செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...