கர்ப்பிணி மனைவி மீது துப்பாக்கி சூடு... தற்கொலை செய்துகொண்ட கணவன்

Report Print Vijay Amburore in இந்தியா

மனைவியுடன் ஏற்பட்ட கருத்துமோதல் காரணமாக கணவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 32 வயதான பங்கஜ் என்கிற நபர் கடந்த பிப்ரவரி மாதம் நேஹா(27) என்பவரை திருமணம் செய்துள்ளார்.

திருமணம் முடிந்த சில நாட்களிலே, சின்ன சின்ன விடயங்களுக்கு எல்லாம் கணவன் - மனைவிக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமையன்று பங்கஜ் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததால், கர்ப்பிணியாக இருந்த நேகா அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது ஆத்திரமடைந்த பங்கஜ் திடீரென துப்பாக்கியை எடுத்து மனைவியை சுட்டுள்ளார். பின்னர் இதுகுறித்து தன்னுடைய சகோதரனுக்கு தகவல் தெரிவித்துவிட்டு, தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சம்பவம் அறிந்து விரைந்து வந்த பவான், கதவை திறந்த போது ரத்தவெள்ளத்தில் பங்கஜ் இறந்துகிடந்துள்ளார். அவருக்கு அருகே நேகா உயிருக்கு போராடி கொண்டிருந்துளார்.

இதனையடுத்து நேகா வேகமாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைக்கு பின்னர் தற்போது அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்