ஜாலியாக சுற்றுலா சென்று திரும்பிய தொழில் அதிபருக்கு வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி !

Report Print Abisha in இந்தியா

தமிழகத்தில், வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்ற தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேரந்தவர் இளங்கோ மணி. இவருக்கு, சொந்தமாக ஜவுளிக்கடை உள்ளது.

இளங்கோ குடும்பத்துடன் ஒரு வாரம் தைவான் நாட்டுக்கு சுற்றுலா சென்று விட்டு நேற்றிரவு வீடு திரும்பியுள்ளார்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு அங்கிருந்த பீரோவில் இருந்த 200சவரன் நகை மற்றும் 5 கிலோ வெள்ளி ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்