நடுவானில் இன்ஜினில் சிக்கிய பறவை.. தரையில் விழுந்து நொறுங்கிய விமானம்: திறமையாக தப்பிய விமானிகளின் புகைப்படம்

Report Print Basu in இந்தியா

கோவாவில் பயிற்சியின் போது இந்திய கடற்படைக்கு சொந்தமான மிக்-29கே ரக போர் விமானம் தரையில் விழுந்து நொறுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.என்.எஸ் ஹன்சாவில் இருந்து புறப்பட்ட விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. பயிற்சியில் ஈடுபட்ட விமானிகள், கேப்டன் ஷியோகண்ட் மற்றும் லெப்டினன்ட் கமாண்டர் தீபக் யாதவ் பாதுகாப்பாக வெளியேறி பராசூட் மூலம் பத்திரமாக தரையிறங்கியதாக இந்திய கடற்படை செய்திதொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இரு விமானிகளும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், விமானம் திறந்த வெளியில் பாதுகாப்பான பகுதியில் விழுந்து நொறுங்கியதால் பொதுமக்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

livefirst

நடுவானில் விமானம் பறந்துக்கொண்டிருந்து போது இன்ஜினில் இடது புற இன்ஜினில் பறவை சிக்கியதே விபத்திற்கான காரணம் என கூறப்படுகிறது. விமானிகள் பராசூட்டில் தப்பிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்