அங்கு வாள் இல்லாமலேயே ஒருவர் கதையை முடித்துவிட்டேன் - பெண் அமைச்சரின் சர்ச்சை பேச்சு

Report Print Abisha in இந்தியா

அமேதியில் கையில், வாள் இல்லாமல் ஒருவரின் கதையை முடித்துவிட்டேன் என்று அமைச்சர் ஸ்மிரிதி இரானி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் பாவ் நகரில் உள்ள சுவாமி நாராயண் குருகுல நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்மிருதி இரானியின் மணவிகளுடன் இணைந்து நடனம் ஆடினார். தல்வார் ரஸ் என்ற குஜராத்திய பாரம்பரிய நடனம்தான் இது. ஏராளமான மாணவ மாணவிகள் கைகளில் வாள் ஏந்தி நடனம் ஆடினர்.

இந்த நடனம் குறித்து கருத்து தெரிவித்த ஸ்மிரிதி இரானி, இந்த நடனம் ஆபத்தானது என்று சிலர் கூறியதை சுட்டிக்காட்டினார். ராகுலை வெற்றிகொண்டதை மறைமுகமாக சுட்டிக்காட்டிய அவர், அமேதியில் கையில் வாள் இல்லாமலேயே ஒருவர் கதையை தாம் முடித்துவிட்டு வந்திருப்பதாகத் தெரிவித்தார்.

இது காங்கிரஸ் ஆதரவாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்