பைபோலார் பிரச்னை மற்றும் மிகப்பெரிய மன அழுத்தக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட இளம்பெண், நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த பின்னர் தனது உடல்நிலை மேம்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக உள்ளவர் ரஜினிகாந்த். இவர் தனது ரசிகை ஒருவர் உடல்நலக் குறைவிலிருந்து மீள காரணமாகியிருக்கிறார்.
சென்னையைச் சேர்ந்த அனீஷா என்ற பெண்ணுக்கு பைபோலார் பிரச்னை மற்றும் மிகப்பெரிய மன அழுத்தக் கோளாறுகள் இருப்பது கண்டறியப்பட்டது. அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்தது. அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் சிகிச்சைக்காக பல லட்சம் வரை செலவழித்ததாகவும் அனீஷாவின் தாயார் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், ரஜினிகாந்துடனான சந்திப்பு அவரது வாழ்க்கையை மாற்றியது என்றும், அவரது உடல்நிலை மேம்பட்டு வருகிறது என்றும் அந்த பெண் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
நான் அவரை சந்தித்ததிலிருந்து நன்றாக உணர்கிறேன். அவருக்கு சக்திகள் உள்ளன. மேலும் மருத்துவர்கள் என்னால் எந்த மனிதர்களிடமும் எனது உணர்வுகளை வெளிப்படுத்த முடியாது என்று கூறுகிறார்கள்.
ஆனால் நான் நினைக்கிறேன், என்னால் முடியும். நான் அவரை நேசிக்கிறேன். என்றென்றும் அவரது ரசிகை என என தனது பதிவில் அனீஷா குறிப்பிட்டுள்ளார்.
#Aneesha Suffering From Major Depressive Disorder Says "The Man Has Powers" Referring To #SuperstarRajinikanth On Meeting Him & Also States That Her Conditions Have Improved Since Then!🤘👍👌@rajinikanth @v4umedia1 pic.twitter.com/QePLoqxqRe
— RIAZ K AHMED (@RIAZtheboss) November 15, 2019