சுபஸ்ரீயை தொடர்ந்து ராஜேஸ்வரி!... இடது கால் அகற்றம்- மயக்க நிலையில் தொடர் சிகிச்சை

Report Print Fathima Fathima in இந்தியா

கோயம்புத்தூரில் அதிமுக கொடிகம்பம் சாய்ந்து விழுந்ததில் விபத்தில் சிக்கிய ராஜேஸ்வரிக்கு இடது கால் அகற்றப்பட்டுள்ளது.

கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி என்கிற அனுராதா(வயது 30).

தனியார் நிறுவனமொன்றில் கணக்காளராக பணியாற்றி வந்த ராஜேஸ்வரி, கடந்த 12ம் திகதி நடந்த விபத்தில் படுகாயமடைந்தார்.

சாலையோரத்தில் நடப்பட்டிருந்த அதிமுக கொடிகம்பம் சாய்ந்ததே இந்த விபத்துக்கு காரணம் என குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் ராஜேஸ்வரிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இடது காலில் எலும்புகள் மற்றும் ரத்த நாளங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்ததால் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர்.

செயற்கையாக பொருத்தப்பட்ட ரத்த நாளங்கள் பலன் அளிக்காததால் காலில் சீல் பிடிக்க ஆரம்பித்தது.

இதனால் ஆபத்து ஏற்படும் என்ற நிலையில் அவரது இடது கால் அகற்றப்பட்டுள்ளது, இன்னும் மயக்க நிலையிலேயே ராஜேஸ்வரி இருப்பதால் சற்று தேறிய பின்னர் வலது காலிலும் அறுவைசிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்