180 பயணிகளுடன் புல்வெளியில் தரையிறங்கி TakeOff ஆன விமானம்: திக் திக் வீடியோ

Report Print Fathima Fathima in இந்தியா

பெங்களூரு விமான நிலையத்தின் புல்வெளியில் 180 பயணிகளுடன் தரையிறங்கி மீண்டும் Take off ஆகி சென்ற விமானத்தின் காட்சிகள் வெளியாகியுள்ளது.

GoAir நிறுவனத்தைச் சேர்ந்த A320 என்ற விமானம், நாக்பூரில் இருந்து கடந்த 11ம் திகதி புறப்பட்டது.

பெங்களூருவில் தரையிறங்க முயன்ற போது ரன்வேக்கு அருகில் இருக்கும் புல்வெளிக்கு சறுக்கிச் சென்றது.

விபரீதத்தை உணர்ந்த விமானி உடனடியாக மீண்டும் விமானத்தை Take Off செய்து ஐதராபாத்தில் அவசரநிலையில் தரையிறங்கியுள்ளார்.

இதனைதொடர்ந்து அனைத்து பயணிகளும் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர்,

இச்சம்பவம் தொடர்பாக உடனடியாக டிஜிசிஏ அமைப்பிற்குத் தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், விமான ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக விமான நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்