சர்ச்சையில் சிக்கிய கவுதம் கம்பீர்! வைரலாகும் மோசமான ஹேஷ்டேக்

Report Print Fathima Fathima in இந்தியா

டெல்லியில் காற்று மாசுபாடு குறித்து ஆலோசிக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் கிரிக்கெட் பார்க்க சென்றிருக்கும் கவுதம் கம்பீரின் செயல்பாடு கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.

டெல்லியில் காற்று மாசு மிக மோசமான நிலையை எட்டியுள்ளது, இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களும் முடங்கியுள்ளன.

இதுகுறித்து விவாதிப்பதற்காக நகர அபிவிருத்தி குழுவின் உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

இக்குழுவின் உறுப்பினரான கவுதம் கம்பிர் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் இந்திய அணி விளையாடும் கிரிக்கெட் போட்டியை பார்க்க சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அந்நேரத்தில் கிரிக்கெட் போட்டி நடக்கும் மைதானத்தில் கம்பீர் இனிப்பு சாப்பிட்டுக்கொண்டிருக்கும் புகைப்படம் வெளியானது, இதற்கு பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளதுடன் டுவிட்டரில் #ShameOnGautamGambhir என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

இந்நிலையில் ஆக்சிஜன் மையம் தொடங்கப்பட்டு மக்கள் காசு கொடுத்து சுத்தமான காற்றை சுவாசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்