பாத்திமா தற்கொலை முடிவை எடுக்கமாட்டார்... சிசிடிவி காட்சியை காட்டவில்லை... கண்ணீர் விடும் தந்தை

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தை உலுக்கியுள்ள பாத்திமா தற்கொலை தொடர்பில் அவர் தந்தை லத்தீப் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார்.

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா சில தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார்.

தனது தற்கொலைக்கு பேராசிரியர் சுதர்சன் பத்பநாபன் தான் காரணம் என அவர் கூறியிருந்தார்.

இந்த விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசினார் பாத்திமாவின் தந்தை லத்தீப்.

அப்போது அவர் கூறுகையில், குற்றவாளிகளை கண்டுபிடித்து உரிய தண்டனை பெற்று தருவோம் என டிஜிபி உறுதி அளித்துள்ளார்.

என்னுடைய மகள் எந்த சம்பவம் நடந்தாலும், அதை கடிதமாக எழுதி வைப்பார். இந்த சம்பவம் குறித்து அனைத்து விவரங்களையும் தெளிவாக அவர் எழுதி வைத்துள்ளார்.

இந்த சம்பவத்தை பார்க்கும் போது தற்கொலை இல்லை என தெரிகிறது. திறமையும், அறிவும் பெற்ற என் மகள் தற்கொலை முடிவு எடுத்திருக்கமாட்டார். பேராசிரியர் சுதர்சன் பத்மநாபனை பார்த்து என் மகள் அச்சமடைந்திருக்கிறார்.

எனது மகளுக்கு ஐஐடியில் மிக கடினமான நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது, இது கொலையோ - தற்கொலையோ? ஆனால் யாருக்கும் எனக்கு ஏற்பட்ட நிலை ஏற்படக்கூடாது.

பாத்திமா தொடர்புடைய சிசிடிவி காட்சிகளை என்னிடம் காட்ட மறுக்கிறார்கள், எனது மகள் மரண வழக்கில் தமிழக அரசையும், டிஜிபியையும் முழுமையாக நம்புகிறேன்

ஐஐடியில் இருந்து இதுவரை யாரும் எங்களை தொடர்பு கொண்டு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை

பாத்திமாவுக்கு தற்கொலை செய்ய கயிறு எங்கிருந்து வந்தது? பாத்திமாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. அவருடைய அறைக்கு நாங்கள் வரும் முன்பு பலர் வந்துள்ளனர். தற்கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் கயிறு அங்கு இல்லை, சீல் வைக்கப்படவும் இல்லை.

பேராசிரியர் சுதர்சன பத்மநாபன் மிகவும் மோசமானவர் என்று என்னிடம் பலமுறை எனது மகள் கூறியுள்ளார்

பல மாணவிகளுக்கு இது போல தொல்லை கொடுக்கப்படுகிறது. பொலிசார் இதனையும் விசாரிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்